ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கான அரசாணையில் திருத்தம் - தமிழ்நாடு அரசு ஆணை

ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கான அரசாணையில் திருத்தம் - தமிழ்நாடு அரசு ஆணை
ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கான அரசாணையில் திருத்தம் - தமிழ்நாடு அரசு ஆணை

ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கான அரசாணையில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

2021-2022-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, பதிவுத் துறையைச் சார்ந்து தொழில் புரிந்துவரும் ஆவண எழுத்தர்கள், அவர்களது குடும்பத்தாரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆவண எழுத்தர் நல நிதியம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது இதற்கான அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆவண எழுத்தர் நல நிதியத்தில் உறுப்பினர்களாக சேர நுழைவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கவும், பதிவு செய்யப்படும் ஆவணம் ஒன்றிற்கு தலா 10 ரூபாய் வசூல் செய்யவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர் ஓய்வுபெறும் உச்ச வயது வரம்பானது 60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், நலத்திட்ட உதவித் தொகையானது பதிவுத்துறை தலைவரின் ஒப்புதலுடன் பதிவுத்துறை தலைவர் மற்றும் கணக்காளரால் கூட்டாக ஒப்புதல் அளிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com