சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு
Published on
தமிழ்நாட்டில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறுதிப் பயணத்திலும் பிரிவினை இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் தலா 3 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டு, 11 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com