ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
Published on

தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற உள்ளது. அன்றைய தினம் எதற்கெல்லாம் அனுமதி உண்டு? இல்லை?

-இறைச்சிக் கடைகள், வணிக வளாகங்கள், காய்கறிக் கடைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-அதே நேரத்தில் அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், மருத்துவ துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், எரிபொருளை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி என அரசு தெரிவித்துள்ளது. 

-முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 முதல் 3 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் உணவகங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அதுகூட பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என அரசு சொல்லியுள்ளது. 

-தடையின்றி செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள் மற்றும் ஊடக, பத்திரிகை துறையினர் ஞாயிறு அன்றும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

-திருமண நிகழ்விற்கு 100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்விற்கு 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. 

-மேலும் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மது கடைகள் இயங்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com