ராமநாதபுரத்தில் அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த இலவச மடிக்கணினி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 51 விலையில்லா மடிக்கணினி தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது. 2015-16ஆம் கல்விஆண்டில் பயின்ற 51 மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக கடந்த 21ம் தேதி பள்ளிக்கு இந்த மடிக்கணினி கொண்டுவரப்பட்டது. பள்ளியில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்த கணினிகளை மாணவர்களுக்கு வழங்கலாம் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் பள்ளியில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அறையின் பூட்டை உடைத்து 51 மடிக்கணினிகளை திருடிச் சென்றுள்ளனர். தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த திருவாடனை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையாக பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.