தமிழகத்தில் முதல்கட்டமாக 7 சிறப்பு ரயில்கள் இயங்கலாம்..!
தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவைகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ள 7 சிறப்பு ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்படும் எனத் தெரிகிறது.
அதன் படி, மதுரை - விழுப்புரம் இடையேயும், கோவை - காட்பாடி இடையேயும் தினசரி ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது. அதேபோல கோவை - அரக்கோணம் மற்றும் திருச்சி - நாகர்கோவில் மார்க்கங்களில் தினசரி ரயிலும், கோவை - மயிலாடுதுறை மார்க்கத்தில் வாரத்தில் 6 நாட்களும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல திருச்சி - விருதாச்சலம் - செங்கல்பட்டு மார்க்கம் மற்றும் திருச்சி - மயிலாடுதுறை - செங்கல்பட்டு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

