தமிழ்நாடு
புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி
புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி
புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்கள் பவானிசாகர் மையத்தில் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில், இனி அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பவானிசாகர் பயிற்சி மையத்திலிருந்து, அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் அதர்வா முரளி?