CM Stalin, Govt employees
CM Stalin, Govt employeespt desk

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்” - முதல்வருக்கு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதலமைச்சர் சந்தித்து பேசுவார் என்றால், 2026ஆம் ஆண்டு அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
Published on

எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதலமைச்சர் சந்தித்து பேசுவார் என்றால், 2026ஆம் ஆண்டு அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என திமுக அறிவித்தது. ஆனால், வெற்றி பெற்று மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்தும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.

cm stalin
cm stalinpt desk

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை பரிசளிக்க தயாராக இருக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

CM Stalin, Govt employees
“ஜிஎஸ்டி.. ஏழை மக்களிடம் கொள்ளையடிக்கும் அமைப்பு” - பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com