அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு
அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தங்களின் அடையாள அட்டையை தவறாது அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே தமிழக அரசின் அடிப்படை விதிமுறைகளில் உள்ளது. இருப்பினும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்கள் யாரும் தங்களது அடையாள அட்டையை முறையாக அணிவதில்லை.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அலுவலக நேரங்களில் அடையாள அட்டையை ஊழியர்கள் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும், ஊழியர்கள் யாரும் அடையாள அட்டையை அணிவதில்லை என்ற புகார் தொடர்ந்து அரசுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பணியாளர்களும் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.