தமிழ்நாடு
போராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்
போராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை அரசு பழிவாங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊதிய உயர்வு, மேல்படிப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசு மருத்துவர்களுக்கு மெமோ மற்றும் இடமாற்றங்கள் அளிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும் என 8 அரசு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை அரசு பழிவாங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.