அரசு அலுவலகங்களோட மின் கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா ?

அரசு அலுவலகங்களோட மின் கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா ?
அரசு அலுவலகங்களோட மின் கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா ?

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 11 இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இதன்கீழ் 37 இலட்சம் மதிப்பில் 11 இடங்களில் 66 சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டன. நாமக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேலம் சாலை சந்திப்பில் நடைபெற்ற விழாவில் பயன்பாட்டிற்கு மின் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாமக்கல் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் புதியதாக போட்டி தேர்வுகளுக்காக அமைக்கப்பட்ட காவல் சிறுவர் நூலகத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.


இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி அரசு துறை அலுவலகங்களில் 1500 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளதாகவும், இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மின் கட்டண பாக்கி அதிகமாக உள்ளதாகவும், ஒவ்வொரு துறையிலும் மின் கட்டணத்தை வசூல் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 4000 மலை கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை என்றும், வன்ப்பகுதியில் மின் கம்பங்களை எடுத்து செல்ல தடையுள்ள நிலையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அக்கிராமங்களுக்கும் விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com