\
தவிர்க்கப்படுமா போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்?

தவிர்க்கப்படுமா போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்?

தவிர்க்கப்படுமா போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்?
Published on

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெறுகிறது.

சென்னை அருகே உள்ள குரோம்பேட்டையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருடன் 45 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பேச உள்ளனர். இதில் 13வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், 7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்டவை குறித்து பேசப்பட உள்ளது. இந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அறிவித்தபடி வேலைநிறுத்தம் தொடங்கும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com