கொசுமருந்து அடிப்பது போல் புகையை வெளியேற்றும் அரசு பேருந்து : வீடியோ

கொசுமருந்து அடிப்பது போல் புகையை வெளியேற்றும் அரசு பேருந்து : வீடியோ

கொசுமருந்து அடிப்பது போல் புகையை வெளியேற்றும் அரசு பேருந்து : வீடியோ
Published on

காஞ்சிபுரத்தில் அதிக புகையை வெளியேற்றி வந்த அரசு  பேருந்தால், பயணிகளுக்கு மூச்சு திணறும் நிலை ஏற்பட்டது.

தாம்பரம் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதாகியும், டயர் பஞ்சர் ஆகியும் சாலையில் நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பயணிகள் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரத்திலிருந்து வந்த அரசு பேருந்து ஒன்று சாலையில் அதிக புகையை வெளியேற்றியபடி சென்றது. இதனால், நகரின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதோடு சில பயணிகளுக்கு மூச்சு திணறும் நிலை ஏற்பட்டது. கொசு மருந்து அடித்தால் வரும் புகையை விட, அரசு பேருந்து வெளியிட்ட அதிக புகையால் சாலையே தெரியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. 

இச்சம்பவத்தால் வாகன ஓட்டுநர்கள் வியாபாரிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பொதுமக்கள் கூறுகையில் காஞ்சிபுரத்தில் இயக்கப்படும், பழயை பேருந்துகளால் இது போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் எனவே, பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com