\
அரசு பேருந்து
அரசு பேருந்துPT

நெல்லை: சுங்கக்கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத டோல்கேட் ஊழியர்கள்!

நெல்லையில் சுங்க கட்டணம் செலுத்த போதிய பணமில்லாததால், அரசு பேருந்தை சாலைக்குள் அனுமதிக்க சுங்கசாவடி ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
Published on

நெல்லையில் சுங்க கட்டணம் செலுத்த போதிய பணமில்லாததால், அரசு பேருந்தை சாலைக்குள் அனுமதிக்க சுங்கசாவடி ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

வள்ளியூர் பணிமனையிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் ஒரு பயணி மட்டும் பயணம் செய்து வந்த நிலையில், பேருந்து நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்பொழுது, fasttrack ல் போதுமான பணம் இல்லாததால், சுங்கசாவடி வழியாக பேருந்தை அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தனர். இதனால் வேறு வழியில்லாமல் பேருந்து மாற்று பாதையில் ஆறு கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு திருநெல்வேலி சென்றது.

இது போன்று பல பேருந்துகளில் கட்டணம் சரிவர கட்டாததால் சுங்கசாவடி ஊழியர்கள் கண்டிப்புடன் நடந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com