'PROJECT TIGER' திட்டம்: களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை

'PROJECT TIGER' திட்டம்: களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை
'PROJECT TIGER' திட்டம்: களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை

நாடு முழுவதும் உள்ள புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க PROJECT TIGER எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் புலிகளை பாதுகாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்கீழ் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய புலிகள் காப்பகமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் 6 கோடி ரூபாய் திட்டத்தில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் தவணையாக ரூ.2.83 கோடியும், இரண்டாவது தவணையாக ரூ.1.06 கோடியும் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மூன்றாவதும் இறுதியான தவணையுமான ரூ.1.89 கோடியை விடுவித்து அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் தவிர்க்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com