மழை பாதித்த பகுதிகளில் உள்ள அமுதம் அங்காடிகளில் காய்கறிகள் விற்பனை! - தமிழக அரசு அறிவுரை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமுதம் அங்காடியில் காய்கறிகள் விற்பனை செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் துறை அலுவலர்களுடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில், கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வீணான பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதற்கு பதிலாகப் புதிய பொருள்களை வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும் அனைத்துக் நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி தரமாக வழங்குதலை உறுதிப்படுத்தடவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்கறிகளை அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com