புல்லட் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பதிவு

புல்லட் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பதிவு
புல்லட் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பதிவு

சிறைத்துறை அதிகாரி மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்ட புல்லட் நாகராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களத்தை சேர்ந்த புல்லட் நாகராஜன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறைசாலை பெண் அதிகாரி, தென்கரை காவல்நிலைய பெண் ஆய்வாளரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுதொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புல்லட் நாகராஜனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி பெரியகுளம் அருகே புல்லட் நாகராஜனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதனையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் புல்லட் நாகராஜன் மீது தேனி, திண்டுக்கல், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதி காவல் நிலையங்களில் 96 வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி‌ பல்தேவ் உத்தரவின்பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புல்லட் நாகராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வ‌ழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com