\
பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 17ஆம் தேதி பெரியாரின் 140ஆவது பிறந்த நாளின்போது சென்னை சிம்சனில் உள்ள அவரது சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது, இரு பிரிவினர் இடையே அமைதியை சீர்குலைத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீ‌ழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

ஜெகதீசனின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வழக்கறிஞர் ஜெகதீ‌சனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை ‌காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்‌தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com