சிவாஜி கணேசன் படத்தை டூடுலில் வைத்து கௌரவித்த கூகுள்!

சிவாஜி கணேசன் படத்தை டூடுலில் வைத்து கௌரவித்த கூகுள்!

சிவாஜி கணேசன் படத்தை டூடுலில் வைத்து கௌரவித்த கூகுள்!
Published on

பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்த நாளையொட்டி, தகவல் தேடுபொறியான கூகுள், தனது முகப்பு பக்கத்தில் சிவாஜிகணேசனின் படத்தை வைத்து கவுரவித்துள்ளது.

இந்திய திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் கலைஞன் சிவாஜி கணேசன். சுமார் 300 திரைப்படங்களில் நடித்து, நடிப்புக்கே தனிப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்தவர். தாதா சாகேப் பால்கே தொடங்கி சர்வதேச விருதுகளைப் பெற்றவர்.

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. உள்பட, நாம் நேரில் பார்த்திராதவர்களை திறம்பட்ட நடிப்பினால் கண் முன்னே கொண்டு வந்தவர் சிவாஜி கணேசன். இவரது 93 ஆவது பிறந்த நாளையொட்டி, தகவல் தேடுபொறியான கூகுள், தனது முகப்பு பக்கத்தின் டூடுலில் சிவாஜி கணேசனின் படத்தை வைத்து கவுரவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com