\
நிபந்தனையை ஏற்றால் நல்லது நடக்கும்: ஓபிஎஸ் அணி அட்வைஸ்

நிபந்தனையை ஏற்றால் நல்லது நடக்கும்: ஓபிஎஸ் அணி அட்வைஸ்

நிபந்தனையை ஏற்றால் நல்லது நடக்கும்: ஓபிஎஸ் அணி அட்வைஸ்
Published on

தங்களது நிபந்தனையை ஏற்றால் எடப்பாடி பழனிசாமி அணிக்கு நல்லது நடக்கும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’வரும் 5ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்குவதற்காக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம். எங்களது நிபந்தனையை ஏற்றால் எடப்பாடி பழனிசாமி அணிக்கு நல்லது நடக்கும். சுற்றுப்பயணத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு இல்லை. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும்’ என அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com