\
"திங்கள்கிழமை  நல்ல சேதி வரும்"   எஸ்பிபி உடல்நலம் பற்றி சரண்

"திங்கள்கிழமை நல்ல சேதி வரும்" எஸ்பிபி உடல்நலம் பற்றி சரண்

"திங்கள்கிழமை நல்ல சேதி வரும்" எஸ்பிபி உடல்நலம் பற்றி சரண்
Published on

சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன். செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் அவருக்கு வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நான்காவது நாளாக எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவரது மகன் எஸ்பிபி சரண். மேலும், இந்த வார இறுதிக்குள் அல்லது திங்கள்கிழமை நல்ல சேதி வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் எஸ்பிபி நலம் பெறுவற்காக அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்திலும் திரைப்பட உலகினரும் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com