திருச்சி விமான நிலையத்தில் 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து 31 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலிருந்து அடிக்கடி தங்கம் கடத்தப்படுவதும், அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. 

இந்த நிலையில் நேற்று இரவு மலேசியாவிலிருந்து திருச்சி வழியாக விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

இதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரை சேர்ந்த முகமது நியாஸ், புதுக்கோட்டையை சேர்ந்த சாபுபர் அலி ஆகியோரிடமிருந்து 31 லட்சம் மதிப்புள்ள 957 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ. 7.66 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க செயின் தமீம் அன்சாரியிடமிருந்தும், ரூ. 11.33 லட்சம் மதிப்புள்ள 355 கிராம் தங்க செயின் முகமது நியாஸிடமிருந்தும் ரூ. 11.90 லட்சம் மதிப்புள்ள 373 கிராம் தங்க செயின் அலியிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் குருவிகளாக செயல்பட்டு கமி‌ஷனுக்காக தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com