காற்றுக்காக வீட்டை திறந்துவைத்து தூங்கியதால் செல்போன் உட்பட 4 சவரன் தங்க நகைகள் திருட்டு

காற்றுக்காக வீட்டை திறந்துவைத்து தூங்கியதால் செல்போன் உட்பட 4 சவரன் தங்க நகைகள் திருட்டு

காற்றுக்காக வீட்டை திறந்துவைத்து தூங்கியதால் செல்போன் உட்பட 4 சவரன் தங்க நகைகள் திருட்டு
Published on

காற்றுக்காக வீட்டை திறந்துவிட்டு தூங்கியபோது தங்க நகை- செல்போனை திருடிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் சீமதம்மன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தூங்குவதற்கு முன்னர் காற்றிற்காக கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கி உள்ளார். இந்நிலையில் அதிகாலையில் திடீரென்று அவரது மனைவி கண் விழித்து பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் டார்ச் அடித்து  எதையோ தேடி கொண்டிருந்ததை கண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மனைவி சத்தம் போட்டு அனைவரையும் எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து அனைவரும் திருடனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் திருடன் வீட்டிலிருந்த செல்போன் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை திருடி விட்டு சென்றதும், அவசரத்தில் தனது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுரவாயல் காவல் நிலையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com