\
ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
Published on: 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தனர்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தேசத்திலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com