சென்னையில் தங்கத்தின் விலை 4 நாட்களில் சவரனுக்கு ரூபாய் 2,000 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் கிராமுக்கு 6,650 ரூபாயாகவும், ஒரு சவரன் 53,200 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அதே சமயத்தில் வெள்ளியின் விலையானது ஒரு கிராம் ரூ96.50 க்கு விற்கப்படுகிறது.
கடந்த 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் அதிகபட்சமாக 55,200 ஆக விற்கப்பட்ட நிலையில், நான்கே நாட்களில் ரூபாய் 2000 சரிந்து 53,200 விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இருந்தாலும் நகைப் பிரியர்கள், தங்கத்தின் விலை இன்னும் குறைந்தால் மகிழ்சியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். இந்த விலை இறக்கமானது நீடிக்குமா அல்லது அதிகரிக்குமா என்பது பங்குசந்தையை பொருத்தே அமையும்.