மீண்டும் உயர்ந்த தங்க விலை : சவரன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் ஒரு சவரன் தங்க நகையின் விலை ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று 28,824 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று காலை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 9 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 28,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் 48 ரூபாய் 50 காசுகளுக்கும் ஒரு கிலே 48,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.29,016 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் அடிப்படையில் ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,627 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.2.40 உயர்ந்து ரூ.49 ஆக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.