புத்தாண்டு தொடங்கியதிலிருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே காணப்படுகிறது.
சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
இதனால், தங்கத்தின் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் இந்தியாவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முதல்முறையாக, 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் அடைந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 7 ரூபாய் விலை அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக 3 ஆயிரத்து 134 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 56 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 25 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் 43 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.