\
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்தது
Published on

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்துள்ளது. 

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்து ரூ. 28, 664 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 3583க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 29 குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு 40 காசு குறைந்து ரூ. 48 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முன்னதாக, கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 29 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com