\
புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.456 உயர்வு

புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.456 உயர்வு

புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.456 உயர்வு
Published on

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்து 30,344 ரூபாயை அடைந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 57 அதிகரித்து ரூ. 3,793க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 51.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலால் கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 2 டாலர் உயர்ந்து 68.21 டாலரானது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com