விமானத்தில் ஒரே நேரத்தில் கடத்தலில் ஈடுபட்ட 113 பேர்; வாழைஇலை விருந்துவைத்த அதிகாரிகள்! பின்னணிஎன்ன?

ஓமன் நாட்டிலிருந்து சென்னைவந்த விமானப் பயணிகளிடம் இருந்து 14 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 20க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஓமன் ஏர்லைன்ஸ்,
ஓமன் ஏர்லைன்ஸ், ட்விட்டர்

ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பல்வேறு பொருட்கள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தேகத்திற்குரிய 113 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல மணி நேரம் விசாரணை நடத்தியதால், அவர்கள் சாப்பிடுவதற்காக வெளியே செல்லவேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்த அதிகாரிகள், அனைவரையும் சுங்கத்துறை அலுவலகத்தில் தரையில் உட்காரவைத்து, வாழை இலைகள் போட்டு, திருமண வீடுபோல், பந்தி பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காலையில் இருந்து நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையில், பயணிகளிடம் இருந்து 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பசை வடிவிலும், தங்க கட்டிகளாகவும் கடத்தி வந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், பதப்படுத்தப்பட்ட குங்குமப் பூக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரு கோடி ரூபாய்க்குமேல் கடத்தல் பொருட்கள் கொண்டு வருபவர்களை மட்டுமே சட்டப்படி கைதுசெய்ய முடியும் என்பதால், கடத்தலில் ஈடுபட்ட 113 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர். இருப்பினும் இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com