கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், 'இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com