தமிழ்நாடு
புதுச்சேரியை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்: கிரண் பேடி
புதுச்சேரியை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்: கிரண் பேடி
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கும் இடையே அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் தலைமை செயலாளரும், நிதித்துறை செயலாளரும் ஒத்துழைப்பு தராததால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கேட்ட தகவல்களை அவர்கள் தரவில்லை என அவர் புகார் கூறியுள்ளார். புதுச்சேரியில் தன்னுடைய பணியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கிரண் பேடி தெரிவித்துள்ளார். மாநில அரசு ஒத்துழைப்பை அளிக்காவிட்டாலும் நேரடியாக களத்திற்கு செல்வேன் என கூறியுள்ள அவர், புதுச்சேரியை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.