வரும் செப் 5 ஆம் தேதி நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து, கட்சிக் கொடியெல்லாம் வெளியிட்டு, மாநாட்டுக்கும் தயாராகிறார். இந்நிலையில்தான் கோட் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் படத்தைக் கொண்டாட வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில், ரசிகர்களின் கொண்டாட்டங்களின் போது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுண்டு.
அத்தகைய சூழல் இப்போது இருக்க வேண்டுமெனில், தொண்டர்கள் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் நிகழும் சம்பவங்கள், கட்சி வரை எதிரொலிக்கும் என்பதால் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலக்கட்டம் என விஜய் தரப்பு கருதுகிறது. இதையொட்டியே நடிகர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகராக இருந்து கட்சியின் தலைவராகவும் உயர்ந்தபின் வெளிவரும் முதல்படம் என்பதால் அதை தொண்டர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதைத் தாண்டி, பொதுமக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற கேள்வி உள்ளது. அந்த எதிர்பார்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை வரக்கூடிய நாட்களில்தான் பார்க்க முடியும்.