GOAT Movie free ticket
GOAT Movie free ticketpt desk

கும்பகோணம்: விஜய் மக்கள் இயக்கம் வழங்கிய GOAT படத்திற்கான இலவச டிக்கெட்- கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி

கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகளுக்கு GOAT திரைப்படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக வழங்கினர்.
Published on

செய்தியாளர்: விவேக்ராஜ்

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள GOAT திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் GOAT திரைப்படம் வெளியாவதை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை வடக்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தாராசுரம் எஸ்.பிரபாகரன் தலைமையில் கும்பகோணம் சேய்குளம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், 70 கல்லூரி மாணவிகளுக்கு, நாளை காலை GOAT முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினர்.

அன்னதானம்
அன்னதானம்pt desk

இதுகுறித்து பேட்டி அளித்த கல்லூரி மாணவிகள்... "தளபதி இன்னும் இரண்டு படங்களில்தான் நடிப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல் முதல் காட்சி பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவசமாக GOAT படத்திற்கான முதல் காட்சி டிக்கெட்டை கொடுத்துள்ளனர். மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

GOAT Movie free ticket
ரசிகர்களை மட்டுமே வைத்து நாட்டை ஆள முடியாது – விஜய் அரசியல் வருகை குறித்து செல்லூர் ராஜூ

தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி தாராசுரம் எஸ்.பிரபாகரன் பேசும்போது, "விஜய் இன்னும் நூறு படங்கள் நடிக்கலாம். அதுதான் எங்களுடைய ஆசை. ஆனால், இந்த இரண்டு படங்களோடு நடிப்பதை நிறுத்துவது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த இரண்டு படங்களை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். அதன்படி அன்னதானமும், 70 கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக GOAT படத்திற்கான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com