ஆங்கிலத்தில் பேசி அசத்திய வாசன் - கைதட்டி உற்சாகப்படுத்திய மோடி
கோவையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆங்கிலத்தில் பேசியதை பிரதமர் மோடி கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் அதிமுக, பாஜக கூட்டணியின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜி.கே.வாசன் தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அத்துடன் மோடி தமிழில் உரையை தொடங்கியது போல, இவர் ஆங்கிலத்தில் தனது உரையை தொடங்கினார். இதைக்கண்ட மோடி அவரை கைதைட்டி உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய வாசன், இந்தியாவில் முன்னிலையில் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி ஆட்சியில் அடித்தட்டு மக்களும் பயன் அடைகிறார்கள் என்றார். மக்கள் விரும்பும் கூட்டணியாகவும், மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் கூட்டணியாகவும் அதிமுக கூட்டணி இருப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக மோடிக்கு பிரம்மாண்டமான தாமரை மாலை அணிவிக்கப்பட்டது.

