தமிழ்நாடு
லாரிக்கு அடியில் சிக்கிய மாணவிகள் உயிர்தப்பிய அதிசயம்
லாரிக்கு அடியில் சிக்கிய மாணவிகள் உயிர்தப்பிய அதிசயம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் இரண்டு மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள சாலையில் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பக்கவாட்டில், இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மாணவிகள் மோதினர். இதில் நிலைதடுமாறிய மாணவி ஒருவர் லாரியின் சக்கரத்தின் அருகில் சிக்கினார். சத்தத்தைக் கேட்ட லாரி ஓட்டுநர் வாகனத்தை உடனே நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.