\
சிறுமிகளைக் கடத்தி பிச்சை எடுக்க வைத்த ஜோதிடர்

சிறுமிகளைக் கடத்தி பிச்சை எடுக்க வைத்த ஜோதிடர்

சிறுமிகளைக் கடத்தி பிச்சை எடுக்க வைத்த ஜோதிடர்
Published on: 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்ட 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நாவினிப்பட்டி பகுதியில் நேற்று அழுதுகொண்டிருந்த 2 சிறுமிகளை பொதுமக்கள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்தச் சிறுமிகளின் பெயர் நெல்லை இடையர்குடியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பதும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராதா என்பதும் தெரியவந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரால் கடத்தப்பட்ட தங்களை, அவர் பிச்சை எடுக்க வைத்தாக சிறுமிகள் கூறியுள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த‌தாகவும் சிறுமிகள் கூறியுள்ளனர். அதனையடுத்து, அவர்களை மீட்ட காவல்துறையினர் ‌கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com