தமிழ்நாடு
திருவாரூர்: காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தச் சென்ற காதலி
திருவாரூர்: காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தச் சென்ற காதலி
திருவாரூர் அருகே தன்னைக் காதலித்தவருக்கு வேறொரு பெண்ணுடன் நடைபெற்ற திருமணத்தைத் தடுக்க இளம்பெண் ஒருவர் சென்றதால் பரபரப்பு நிலவியது.
குடவாசல் - நல்லிச்சேரியைச் சேர்ந்த செல்வி என்பவர், சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியபோது, திருவாரூர் - செம்மங்குடியைச் சேர்ந்த செந்தில்முருகன் என்ற கிரேன் ஆபரேட்டரை காதலித்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்று திரும்பிய செந்தில்முருகன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக செல்வி அறிந்துள்ளார்.
திருவாரூர் - மணக்கால் அய்யம்பேட்டையில் தனியார் அரங்கில் இன்று திருமணம் நடைபெற்ற போது, திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக செல்வி அங்கு சென்றார். மண்டபத்துக்குள் நுழைய முயன்ற செல்வியை, காவல்துறையினரும் வேறு சிலரும் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.