\
காதலர் கைவிட்ட விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை

காதலர் கைவிட்ட விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை

காதலர் கைவிட்ட விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை
Published on

சேலத்தில் காதலர் கைவிட்ட விரக்தியில் பட்டதாரி பெண் ஒருவர் தூக்கிட்டு ‌‌தற்கொலை‌ செய்து கொண்டார்.

சேலம் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர், ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றி வரும் உறவினரான ஸ்ரீனிவாச முருகனை காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, ஸ்ரீனிவாச முருகன் அப்பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அப்பெண் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்தும், ‌போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அப்பெண்ணி‌ன் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com