அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்காததை கண்டித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
கோமன் கிராமத்தை சேர்ந்த கலா என்பவருக்கு 2014 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்திற்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து கலா பலமுறை மனு அளித்தும் பட்டா வழங்கப்படாததால், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலா தீக்குளிக்க முயன்றார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, கலா தன்னிடமிருந்த ஆவணங்களை வீசி எறிந்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.