மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை எரித்துக் கொன்றதாக அவரது தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீராளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியகார்த்திகேயன் என்பவரது மகள் சுகன்யா, பூபதி என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் மணம் புரிந்துள்ளார்.
கணவருடன் ஈரோடு அருகே வசித்து வந்த சுகன்யாவை, கடந்த மாதம் 15-ம் தேதி திருவிழாவிற்காக வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் அவரை கொலை செய்து எரித்துள்ளனர்.
கணவர் பூபதி புகார் அளித்ததைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய பேரையூர் காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.