\
காட்டுக்குள் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் பெண்ணின் உடல்!

காட்டுக்குள் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் பெண்ணின் உடல்!

காட்டுக்குள் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் பெண்ணின் உடல்!
Published on

திருச்சி வனப்பகுதியில் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

திருச்சி சிறுகனூர் அருகே சுமார் 930 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது  தச்சங்குறிச்சி வனப்பகுதி. இந்நிலையில் இன்று அதிகாலை தச்சங்குறிச்சி வனப்பகுதியின் உள்ளே கார் எரிந்து கொண்டிருப்பதை அவ்வழியாக சென்ற மக்கள் கண்டுள்ளனர். இது குறித்து சிறுகனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காருக்குள் எரிந்த நிலையில் உடல் இருப்பதையும் கண்டு மீட்டனர்.  எரிந்ததது பெண் சடலம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

எரிந்த நிலையில் இருக்கும் கார் யாருக்கு சொந்தம்? உள்ளே எரிந்த நிலையில் இருந்த நபர் யார்? உள்ளிட்ட தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இது கொலையாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், “கடந்த ஒரு வருடத்தில் அப்பகுதியில் 4 கொலைகள் நடந்துள்ளது.ஒரு கொலையில் மட்டுமே கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 கொலை விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இந்த நிலையில் மேலும் ஒரு கொலை அரங்கேறியுள்ளது” என தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com