\
டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு 

டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு 

டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு 
Published on

சென்னை பூந்தமல்லி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் இளம்பெண் லாவண்யா. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாவண்யாவுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று லாவண்யா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com