\
குப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை

குப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை

குப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை
Published on

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே 8 மாத பெண் குழந்தையை குப்பை தொட்டியிலிருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
    
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று விடியற்காலை 4 மணி அளவில் குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 8 மாத பெண் குழந்தை குப்பையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் குழந்தையை மீட்ட ஜோலார்பேட்டை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் ஆசிரியர் நகரிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு தேவையான அனைத்து வகையான சோதனைகளும் செய்யப்பட்டது. குழந்தையை குறித்து விளம்பரம் செய்த பிறகு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து குழந்தையின் உறவினர் யாரும் வரவில்லை எனில் குழந்தையை தொடர்ந்து காப்பகத்திலேயே பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com