\
கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதி: நிதித்துறை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு

கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதி: நிதித்துறை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு

கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதி: நிதித்துறை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு
Published on: 

தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது பொறுப்பை நிதித்துறை செயலாளர் சண்முகம் கூடுதலாக வகிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் முதலமைச்சர் வீட்டில் நடந்த ஆலோசனையில் பங்கேற்று திரும்பும்போது கிரிஜா வைத்தியநாதன் தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.இதில் அவரது கால் எலும்பில் படுகாயம் ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, கிரிஜா வைத்தியநாதன் பணிக்கு திரும்பும்வரை தலைமைச்செயலாளர் பொறுப்பை நிதித்துறை செயலாளர் சண்முகம் கவனிப்பார் என அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிஜா வைத்தியநாதனை முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com