செஞ்சி : திருமணமான 7 நாட்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! மணமகன் வீட்டார் தலைமறைவு!

செஞ்சி : திருமணமான 7 நாட்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! மணமகன் வீட்டார் தலைமறைவு!

செஞ்சி : திருமணமான 7 நாட்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! மணமகன் வீட்டார் தலைமறைவு!
Published on

திருமணமான ஏழே நாட்களில் திருமணம் செய்துகொண்ட மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் செஞ்சி அருகே நாட்டாமங்கலத்தில் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டாமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் ரைஸ்மில் உரிமையாளர் விநாயகமூர்த்திக்கும், கீழ் நெல்லிமலை கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா என்கிற பெண்ணுக்கும் கடந்த 9ஆம் தேதி செஞ்சி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை மணப்பெண் ரஞ்சிதா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு கிடந்தவரை குறித்து உறவினர்கள் செஞ்சி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மணமகன் குடும்பத்தார் அனைவரும் தலைமறைவாக உள்ளதால் கொலையா அல்லது தற்கொலையா என்று என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமான 7 நாட்களில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com