ஆழ்குழாய் கிணற்றை மீட்டு ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: நீதிபதிகள் உத்தரவு

ஆழ்குழாய் கிணற்றை மீட்டு ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: நீதிபதிகள் உத்தரவு

ஆழ்குழாய் கிணற்றை மீட்டு ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: நீதிபதிகள் உத்தரவு
Published on

புதுக்கோட்டை பொன்னமராவதி அண்ணாநகரில் அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை 4 வாரத்தில் அகற்ற வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

புதுக்கோட்டை பொன்னமராவதி அண்ணாநகரைச் சேர்ந்த முத்தையா, இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"
பொன்னமராவதி அண்ணாநகரில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றோம். எங்கள் குடியிருப்பை ஒட்டி பொது மயானத்துக்கு செல்லும் பொன்னமராவதி- இந்திராநகர் சாலை உள்ளது. இறந்தவர்களின் உடல்களை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லும் போதும், பெண்கள் வயதுக்கு வந்தவுடன் செய்யும் சடங்குகளை முட்டுக்குடிச்சி என்ற நத்தம் புறம்போக்கு இடத்தில் வைத்து செய்வது வழக்கம். இந்த இடத்தில் அம்மா திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டது.

 இந்நிலையில் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சிலர் ஆழ்குழாய் கிணற்றை மண் போட்டு மூடியும் அந்த இடத்தில் கோயிலும் கட்டிவருகின்றனர் .

இது குறித்து புகார் அளித்ததால், பொன்னமராவதி காவல் ஆய்வாளரிடம் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, அங்கு எந்த கட்டிடமும் கட்டக்கூடாது என எச்சரித்து, எழுத்துபூர்வமாக உறுதி கடிதமும் வாங்கினார். பின்னர் அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என போர்டும் வைக்கப்பட்டது.

 இந்நிலையில்தான்  அந்த இடத்தில் 4.3.2018-ல் திடீரென விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்தவர்கள் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஒருவரை தாக்கி உள்ளனர். பெண்களை தொடர்ந்து மிரட்டியும் வருகின்றனர். அரசு இடத்தில் செய்யப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பால் தினமும் பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஆழ்குழாய் கிணறை மீட்க வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்
 என மனு அளித்துள்ளனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை 4 வாரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டுள்ளார் 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com