”பொதுவாக கல்வியில் நுழைவுத்தேர்வு கூடாது” - சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி

”பொதுவாக கல்வியில் நுழைவுத்தேர்வு கூடாது” - சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி
”பொதுவாக கல்வியில் நுழைவுத்தேர்வு கூடாது” - சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி

”பொதுவாக கல்வியில் நுழைவுத்தேர்வு கூடாது” என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

நுழைவுத்தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் 3 ஆண்டு டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர முன்வர வேண்டும் என சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது. மூன்றாண்டு டேட்டா சயின்ஸ் படிப்பு குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,

“வழக்கமாக ஐஐடியில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வின் வாயிலாகவே சேரமுடியும். முதல்முறையாக ஆன்-லைன் வழியில் கற்பிக்கப்படும் பிஎஸ்சி டேட் ஆஃப் சயின்ஸ் பாடப்பிரிவில் மாணவர்கள் நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்பில் சேருவதற்கு ஐஐடி நடத்தும் தகுதித் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதுமானது. தகுதித்தேர்வுக்கு உரிய பயிற்சியும் சென்னை ஐஐடி வழங்குகிறது. மேலும், சேரக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் ஐஐடி சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்களுக்கு இலவசமாகவும் 5 லட்ச ரூபாய்க்கு குறைவாக வருவாய் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் பெண் மாணவிகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

ஆண்டுதோறும் இந்தப் படிப்பில் சேருவதற்கு மூன்று முறை தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் செல்லும். டேட்டா சயின்ஸ் பட்டப் படிப்பை மாணவர்கள் 5 ஆண்டுகளில் முடிக்கலாம் என்கிற வாய்ப்பும் வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து 1,500 மாணவர்கள் தற்போது இந்த படிப்பில் சேர்ந்து உள்ளனர். ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழக மாணவர்கள் ஐஐடி வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஐஐடி இயக்குநர் அழைப்பு விடுத்தார். மேலும், கல்வியில் பொதுவாக நுழைவுத் தேர்வு கூடாது என்று சென்னை ஐஐடி இயக்குனர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com