மக்களவை தேர்தல் 2024|”இதுதான் முன்னேற்றமா ஐயா.. இடையில் நடந்த மாற்றம் என்னய்யா? ”-வேல்முருகன் பேச்சு

மக்களவை தேர்தல் 2024|”இதுதான் முன்னேற்றமா ஐயா.. இடையில் நடந்த மாற்றம் என்னய்யா? ”-வேல்முருகன் பேச்சு

மக்களவை தேர்தல் வர இருக்கின்ற இந்நேரத்தில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகவாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுதலை சிறுத்தை கட்சிக்காக டி. ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

”தமிழர்களே நாம் ஒரு கணம் சிந்தித்துபார்க்கவேண்டும். தமிழ்நாட்டின் பெரும்பாண்மையான இரண்டு சமூகங்கள் அரசியல் முரண்பட்டு நிற்கின்ற காரணத்தால், இன்று பிஜேபி என்கின்ற பாஸிஸ கும்பல் வேகமாக காலூன்றி வருகிறது . வேகமாக தனது வளர்ச்சியை நோக்கி பயணிப்பதுபோல் பாசாங்கு காட்டுகிறது. உழைக்கும் மக்களை அரசியல் சூழ்ச்சி செய்து சாதிய சமூக ரீதியாக மதத்தின் பெயரால் மக்களை பாகுபடுத்தி ஓட்டு அரசியலில் ஆதாயம் தேடுகின்றனர். இந்த கும்பலை விரட்டி அடிக்கவேண்டும்.” என்றார். இது குறித்த வீடியோவை பார்க்க கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com