விரைவில் பொதுத்தேர்தல்: பிரேமலதா

விரைவில் பொதுத்தேர்தல்: பிரேமலதா

விரைவில் பொதுத்தேர்தல்: பிரேமலதா
Published on

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறும் என தேமுதிக தலைவர் வி‌ஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் படுகொலை செய்யபட்ட தேமுதிக பிரமுகர் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரேமலதா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஆர்.கே நகர் தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றார். தேர்தலை தடை செய்வதால் எந்த பயனும் இல்லை என கூறிய அவர், தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்த கட்சியை தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதேபோல் பணப்பட்டுவாட செய்த வேட்பாளரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது எனவும் பிரேமலதா கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com