ஒரே நாடு ஒரே தேர்தல்: எந்த காலத்திலும் நடக்கப் போவதில்லை - அமைச்சர் TRB.ராஜா விமர்சனம்

எந்த காலத்திலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப் போவதில்லை.. அதற்கான சாத்திய கூறுகள் சட்டத்தில் இல்லை என்று அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.
Minister TRB Raja
Minister TRB Rajapt desk

செய்தியாளர்: பிரவீண்

கோவையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் டிஆர்பி.ராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்தியேகமாக பேட்டியில்... பாஜக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசினார். ஆட்சி அமைக்கப் போவதில்லை என்பதால் எதை வேண்டுமானால் அறிக்கையில் கூறலாம். மக்கள் விரோத சட்டங்களை தொடர்ச்சியாக பாஜக எடுத்துரைப்பது இயல்பாகி விட்டது.

Minister TRB Raja
Minister TRB Rajapt desk

எந்த காலத்திலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியக் கூறுகள் சட்டத்தில் இல்லை. அப்படியான அறிக்கைகளை பலமுறை கொடுத்தனர். அதை செய்வதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்றவர் தொடர்ந்து... கோவையில் திமுக டெபாசிட் இழக்கப் போவதாக அண்ணாமலை கூறியதற்கு பதிலளித்த அவர், அண்ணாமலை Fill in the blanks என்று கூறினார்.

Minister TRB Raja
"எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!"-மத்திய அரசை நோக்கி முதல்வர் கேள்வி

ஜூன் 4 ஆம் தேதி சாமானியர்களின் குரல் டிஆர்பி.ராஜாவிற்கு கேட்கத்தான் போகிறது என அண்ணாமலை கூறியது தொடர்பாக கேட்டதற்கு, ஜூன் 4 ஆம் தேதி எப்படி கேட்கப் போகிறது என பாருங்கள் என்று கூறியதை அடுத்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com